கோவை மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
Advertisement
கோவை, டிச. 7: கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் அடிப்படையில் தற்போது வரை இறந்த வாக்காளர்கள் 1.13 லட்சம் பேர் உள்பட மொத்தம் 5 லட்சம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சூலூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி உள்பட 10 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இதில், 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட அளவில் 3,117 ஓட்டு சாவடிகள் வாரியாக பூத் லெவல் ஆபீசர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. இப்பணி வரும் 11-ம் தேதி முடிகிறது. இதனை தொடர்ந்து வரும் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.
Advertisement