மேட்டுப்பாளையம், செப்.7: சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறு, பம்பு செட் மற்றும் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள் மாநில பேரிடர் நிவாரண நிதி 2026-2027ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற உள்ளன. இப்பணிகளை சிறுமுகை பேரூராட்சி வாரச்சந்தை வளாகத்தில் நேற்று எம்எல்ஏ சுனில் ஆனந்த் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, பணி மேற்பார்வையாளர் பிரவீன் குமார், சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன், அலுவலக பணியாளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


