Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடையில் தகராறு: விற்பனையாளர் மண்டையை உடைத்தவர் கைது

கோவை, செப். 7: ராமநாதபுரம் மாவட்டம், அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (45). இவர் கோவை வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் சூபர்வைசராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி மாலை சுரேஷ் பாபு விற்பனையாளர்களான சரவணகுமார், மதியழகன் மற்றும் சேஷராஜா ஆகியோருடன் கடையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கோவை சீரநாயக்கன்பாளையம், அண்ணா வீதியைச் சேர்ந்த சங்கர் (43) என்பவர் காலி மதுபாட்டில் ஒன்றை திருப்பிக் கொடுக்க வந்துள்ளார். அப்போது சூபர்வைசர் சுரேஷ் பாபு, காலி பாட்டிலை கடையின் முன்பக்கம் போடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனால் சங்கர் ஆத்திரமடைந்து, சுரேஷ் பாபுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் தகராறில் ஈடுபட்ட அவர், அங்கிருந்த விற்பனையாளர் சரவணகுமாரின் தலையில் காலி மதுபாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் சரவணகுமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் பாபு சத்தமிட்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். ஆட்கள் வருவதைக் கண்ட சங்கர், கையில் இருந்த காலி பாட்டிலைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இது குறித்து சூபர்வைசர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில், வடவள்ளி பேலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரைக் கைது செய்தனர்.