கோவை, ஆக.7: ரத்தினம் குளோபல் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஆராய்ச்சி துவக்க விழா-2026 பதவியேற்பு விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் காந்தபாபு, ரத்தினம் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் கிருஷ்ணராஜ், ஆராய்ச்சித் திட்டங்களின் இயக்குநர் பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆராய்ச்சி கடவுச்சீட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆராய்ச்சித்துறையில் சிறந்து விளங்குவதற்கான பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. சுதந்திரமான சிந்தனைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு, செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
+
Advertisement




