Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரிவாளுடன் வந்து நள்ளிரவில் வீடு முற்றுகை சிறையில் இருந்து வந்த வாலிபருக்கு கொலை மிரட்டல்

கோவை,ஆக.7: நள்ளிரவில் வீட்டை முற்றுகையிட்டு அரிவாளுடன் வந்து வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், பகுதியை சேர்ந்தவர் விக்கிரமார்த்தாண்டம் (26).இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், சந்தோஷ் என்பவரை தாக்கிய வழக்கில் விக்கிரமார்த்தாண்டம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

கடந்த 4-ம் தேதி இரவு விக்கிரமார்த்தாண்டம் தனது வீட்டில் இருந்த போது, 3 பேர் வீட்டின் வெளியே நின்று சத்தம் போட்டு தகராறு செய்தனர். ஆனால், விக்கிரமார்த்தாண்டம் வெளியே வந்து பேசாமல் உள்ளே இருந்தார். இதனால் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் விக்கிரமார்த்தாண்டம் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அவர் ஜன்னல் வழியே பார்த்தபோது, வெளியே அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், மணி, பசுபதி, விஷ்வா மற்றும் தவுபிக் ஆகியோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் கதவைத் திறக்குமாறு கூறி, விக்கிரமார்த்தாண்டத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.பயந்துபோன விக்கிரமார்த்தாண்டத்தின் அண்ணன், தாய் மற்றும் மனைவி ஆகியோர் வீட்டின் உள்ளிருந்தபடியே கதறி அழுது, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கெஞ்சியுள்ளனர். அதன் பின் வெளியே வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.இதுகுறித்து விக்கிரமார்த்தாண்டம் அளித்த புகாரின் பேரில், பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.