Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் கஞ்சா பறிமுதல்

கோவை, ஆக.5: கோவை வடவள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சிறுவாணி ரோட்டில் சந்தேகம்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த அங்க்லோஸ் (21), பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மேத்யூ (21) மற்றும் திருச்சூரை சேர்ந்த முகமது பாசில் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களில் அங்க்லோஸ் மற்றும் முகமது பாசில் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.