Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மொபட் மீது கார் மோதி ஒருவர் பலி

கோவை, ஆக.5: கோவை சிங்காநல்லூர் சின்ன குருசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (54). இவர், நேற்று முன்தினம் மொபட்டில் வெள்ளலூர் - சிங்காநல்லூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாலத்தின் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராவிதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் துரைராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.