கோவை, ஆக.5: கோவை சுங்கம் பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (கோவை மண்டலம்) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு 120 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்றும் இதுபோல் எங்களது ஆர்ப்பாட்டம் தொடரும்’’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
+


