Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இருப்பது 24... செயல்படுவது 5...

கோவை, செப். 5: கோவை வஉசி பூங்காவில் சாலையோரை உணவு பூங்கா திட்டம் 2023 அக்டோபரில் துவங்கப்பட்டது. இத்திட்டம், ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2024 மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், 24 கடைகளும் அண்மையில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டன. இதனுடன் சிறிய உணவு அருந்தும் பகுதி மற்றும் சிறிய அளவிலான கழிவுநீர் வடிகால் பணிகளும் ரூ.30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டன. கடைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும் ஜி.எஸ்.டி வரி தவிர்த்து மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுத்தெருவில் 24 கடைகள் இருந்தும், தற்போது 5 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, வ.உ.சி. மைதானம் அருகே செயல்பட்டு வரும் சுமார் 45 தெருவோர வியாபாரிகளுக்கு இடமளிக்கும் வகையில் இதேபோன்ற மற்றொரு உணவுத்தெருவை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வ.உ.சி மைதானம் அருகே உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். அங்கு செயல்படும் சுமார் 45 தெருவோர வியாபாரிகளுக்கு மேடை, மேற்கூரை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தி, டோக்கன் அடிப்படையில் இடங்கள் ஒதுக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் தற்போது ஆரம்பகட்ட நிலையில் உள்ளது.