Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கோவையில் கோமாரி நோய் தடுப்பூசி பணி துவங்கியது

கோவை,ஜூலை3:கோவை மாவட்டத்தில் 2.39 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட கால்நடை பராமரிப்புத்துறை இலக்கு நிர்ணயித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு 9வது சுற்று கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது. கோமாரி நோய் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம்,நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் உள்ளிட்ட காரணங்களினால் இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது.

இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர்,பால்,உமிழ்நீர்,சாணம் போன்றவையால் மற்ற கால்நடைகளுக்கு இந்த நோய் பரவுகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களின் பசுக்கள்,எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்திருந்தார். இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில்,\”மாவட்டத்தில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 607 மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் விடுப்படும் மாடுகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படும். தடுப்பூசி பணிக்காக 118 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் 100 சதவீதம் மாடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\” என்றனர்.