Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போக்குவரத்து விதிமீறல் 1,498 பேர் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை

கோவை, அக். 2: மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,498 பேரின் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிமீறல் தொடர்கிறது. இதன்காரணமாக, சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. குறிப்பாக, அதிவேகம், சிக்னல் விதிமீறல், ஹெல்மெட் அணியாமல் செல்வது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்கள், சாலை விபத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதுபோன்ற விதிமீறல்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தினால் மட்டுமே சாலைவிபத்துகளை குறைக்க முடியும் என போலீசார் கருதுகின்றனர்.

இதற்காக, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும்போது, அவர்கள் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்காக மாநகர போலீசார் `ஸ்பார்ட் பைன்’ (உடனடி அபராதம்) திட்டத்தை அன்றாடம் அமல்படுத்தி வருகின்றனர். ஆனாலும், பல இடங்களில், வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு, விதிமீறல் கண்டறியப்பட்ட இடத்திலேயே அபராத தொகை வசூலிக்கப்பட்டு, அங்கேயே ரசீது கிழித்து கொடுக்கும் நடைமுறை அமலில் இருந்தது.