தொண்டாமுத்தூர், அக்.2: கோவை மருதமலையில் சுப்ரமணியசுவாமி கோயிலில் மாதம்தோறும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று 14 பொது உண்டியல்கள் எண்ணப்பட்டது. இதில் 85 லட்சத்து 65 ஆயிரத்து 359 ரூபாய் வசூல் ஆனது. கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 633 வசூல் ஆனது திருப்பணி உண்டியலில் 69 ஆயிரத்து 724 வசூல் ஆனது.
மொத்தம் 87 லட்சத்து 49 ஆயிரத்து 716 வசூல் ஆனது. தங்கம் 99 கிராம் 300 மில்லி கிராமும் வெள்ளி 2கிலோ 870 கிராமும் பித்தளை 21 கிலோவும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையின்போது அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், கோயில் துணை ஆணையர் விமலா, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் துணை ஆணையர் சுவாமிநாதன், பேரூர் சரக ஆய்வர் பவானி ஆகியோர் முன்னிலையில் கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

