Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலங்களில் புகுந்து பாகுபலி யானை அட்டகாசம்

மேட்டுப்பாளையம், ஜூலை 2: மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்தில் புகுந்து சோளப்பயிர்களை சேதம் செய்த பாகுபலி யானை கண்டு விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், குரும்பனூர், சமயபுரம், நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை பகல் வேளைகளில் வனப்பகுதிக்குள்ளும்,

இரவு வேளைகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களிலும் முகாமிட்டு பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது. மேலும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே நேற்றிரவு குரும்பனூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்த பாகுபலி யானை அங்கிருந்த சோளப்பயிர்களை பறித்து உண்டது. இதனை அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.