Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் 30 பேர் கைது

மேட்டுப்பாளையம், ஜூலை 2: மேட்டுப்பாளையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஜூலை 1 ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து மேட்டுப்பாளையத்தில் ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தாலுகா செயலாளர் ஜெயந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசின் வி பி கிராம்ஜி சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,

கிராமப்புற மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் - கோவை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட அச்சங்கத்தினர் முயன்றனர். இதனையடுத்து சங்க மாவட்ட குழு உறுப்பினர் பங்கஜவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் கமிட்டி உறுப்பினர் செல்வராஜ், சிபிஎம் தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.