Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வேலூர் இப்ராஹிம் கோவை கோர்ட்டில் ஆஜர்

கோவை, ஆக 1: கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனுமதியின்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜ சிறுபான்மையின தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். பாஜ கட்சியின் சிறுபான்மையின தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, கோவை ராமநாதபுரம் பகுதியில் அனுமதியின்றி பேசினார்.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை ஜேஎம்-1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் இப்ராஹிம் கோவை கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த ஜே.எம்-1 மாஜிஸ்திரேட் தமிழ் இனியன் வழக்கை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.