Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இபிஎப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 18: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மண்டல இபிஎப் அலுவலகம் முன்பு இபிஎப் பென்ஷனர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செல்லத்துரை துவக்கவுரையாற்றினார்.

அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கவுரையாற்றினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச பென்ஷன் தொகையை அகவிலைப்படியுடன் உடனடியாக அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தை மற்றும் சூதாட்டத்தில் முதலீடு செய்வதைத் தடுக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பறிக்கப்பட்ட கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். பென்ஷனர்கள் அனைவருக்கும் இஎஸ்ஐ., மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.