Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதுக்கரை பகுதியில் டாஸ்மாக் பார்களில் ஹான்ஸ் விற்பனை

மதுக்கரை, ஆக.18: மதுக்கரை பகுதியில் டாஸ்மாக் பார்களில் ஹான்ஸ் விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழக அரசு தமிழகத்தில், கஞ்சா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை தாலுகா, செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, மதுக்கரை, நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்பட்டு வரும் பார்களில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.