கரூர், அக். 31: கரூர் மனோகரா கார்னர் அருகே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 27ம்தேதி முதல் நவம்பர் 2ம்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று காலை 10 மணி முதல் 10.30 மணி வரை கரூர் மனோகரா கார்னர் அருகே கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அம்புரோஸ் ஜெயராஜா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தாண்டின் உறுதிமொழியாக விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற அடிப்படையில் கல்லு£ரி மாணவர்கள் சார்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

