Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தோகைமலை அருகே மது விற்ற முதியவர் கைது

தோகைமலை, அக், 30: தோகைமலை அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகமலை அருகே வடசேரி ஊராட்சி பாலசமுத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னன் மகன் மூக்கன் (66). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டின் பின் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தார்.

இப்பகுதி மக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூக்கன் தனது மதுபாட்டில் விற்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து மூக்கனை கைது செய்தனர்.