Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கரூர் அமராவதி ஆற்றங்கரையில் சீத்த முட்செடிகளை அகற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

கரூர், ஏப். 30: திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் ஆரம்பித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலுாரில் காவிரி ஆற்றில் கலக்கிறது அமராவதி ஆறு. இந்த ஆறு கரூர் மாவட்டத்தில் கொத்தம்பாளையம், செட்டிபாளையம், சுக்காலியூர், படிக்கட்டுத்துறை, பசுபதிபாளையம் வழியாக திருமுக்கூடலுார் வரை செல்கிறது.இதில், பெரும்பாலான பகுதிகளில் ஆற்றை சீத்த முட்செடிகள் அதிகளவு ஆக்ரமித்துள்ளது.

மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாத அளவுக்கு சீத்த முட்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதனை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் சீத்த முட்செடிகள் அகற்றப்பட்டன. எனவே, அதுபோல, மாவட்ட நிர்வாகம் ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை விரைந்து அகற்றிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.