Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

தோகைமலை, அக். 29: கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகம் கழுகூர் ஊராட்சி ஏ.உடையாபட்டி சமுதாய கூடம் அருகே பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக இப்பகுதி பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் சமுதாய கூடம் அங்கு சென்று சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர்.

அப்போது கூடலூர் ஊராட்சி சங்காயிபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி (எ) பழனிசாமி (59), மாணிக்கம் (52), ராக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னுச்சாமி (எ) சுந்தரம் (47), பாலு (40), ஏ. உடையாபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சசி (27), செந்தில் (40), நாகராஜ் (27) பணம் வைத்து சூதாட்டிய 7 பேர் மீது போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.