Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கிருஷ்ணராயபுரம் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

கிருஷ்ணராயபுரம், அக். 29: கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் சமுதாய வளகாப்பு விழாவில் எம்எல்ஏ கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் வீரராக்கியதத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து புடவை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சிறு வரிசைகள் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் குறள் செல்வி, அங்கன்வாடி பணியாளர்கள், 150க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.