Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

கரூர், அக். 29: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற மாநில பிரதிநிதித்துவ பேரவை முடிவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி இந்த அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.