கரூர், ஆக. 29: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் சார்பில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார்.
அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த அமைப்பினர் கருப்பு உடை அணி்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


