கரூர், ஆக. 29: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.கரூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 70 கடைகளை சேர்ந்த பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். இணைய வழி விற்பனையை தடை செய்ய வேண்டும். காலி பாட்டில்களை திரும்ப பெறும் திடடத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



