கரூர், ஆக. 28: கரூர் மாவட்டம் புலியூர் உப்பிடமங்கலம் சாலையில் புதருக்குள் மறைந்து கிடக்கும் கழிவறை வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையோரம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை அமைத்து தரப்பட்டது.
ஒரு சில ஆண்டுகள் மட்டுமே இவை பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது பயன்படுத்திட முடியாத சூழல் காரணமாக புதருக்குள் மறைந்து கிடக்கும் சூழலில் உள்ளது. எனவே, இதனை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியினர் நலன் கருதி இதனை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.



