Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வளையப்பட்டி செல்லும் நெடுஞ்சாலை பாலங்களில் தூய்மை பணி மும்முரம்

குளித்தலை, ஆக. 28: அய்யர்மலை பகுதியில் இருந்து வளையப்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் ஆய்வாளர் சேகர் மேற்பார்வையில் சாலை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பருவ மழை தொடங்க சில நாட்களே உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக நெடுஞ்சாலை துறை நகர்ப்புற கிராமப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் நீர்நிலைகள் கடந்து செல்லும் வகையில் உள்ள பாலங்களை அப்புறப்படுத்தி ஆகஸ்ட் மாதம் முழுவதும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கிராம நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள காட்டு வாரி வழியாக மழைக்காலங்களில் உபரி நீர் அடித்து செல்லும் போது, சீராக கடந்து மாற்று இடத்திற்கு செல்லும் வகையில் நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் பாலங்களில் குப்பை, கூளங்களோ தண்ணீர் தேங்கும் நிலையில் இருக்கும் பகுதியை கண்டறிந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கணபதி, உதவி பொறியாளர் ஜெயபால் அறிவுறுத்தலின்படி சாலை ஆய்வாளர் சேகர் மேற்பார்வையில் சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலை பகுதி பாலங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.