கரூர், ஆக. 28: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) மண்டல பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.தனியார் மயமாக்கல் மற்றும் ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.



