Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாட்டு கொட்டகையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷன் பலி: போலீசார் விசாரணை

கரூர், பிப். 28: உறவினரின் மாட்டுக் கொட்டகையில் பல்பு மாட்டச் சென்றவர், மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பொன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(42).

இவர், கடந்த 25ம்தேதி அருகம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான மாட்டு கொட்டகைக்கு சென்று புதிதாக பல்பு மாட்டும் பணியை மேற்கொண்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விழுந்தார். உறவினர்கள் இவரை, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.