தோகைமலை, ஆக.26: தோகைமலையில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி வையம்பட்டி அருகே தனியார் கல்லூரியில் பிகாம் சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினந்தோறும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று தெரிவித்து கடந்த 24ம் தேதி அன்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இந்நிலையில் அன்றிரவு 8.30 மணி அளவில் மாணவியின் தாயார் மளிகைக் கடைக்கு சென்று உள்ளார்.
கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்த மகளை காணவில்லை. அருகில் பல்வேறு இடங்களிலும், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் விஜயலெட்சுமி தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.



