கரூர், ஆக. 26: கரூர் மினி பேரூந்து நிலையத்தில் இருந்து ஐந்துரோடு, வாங்கல், புலியூர், நரிகட்டியூர், தொழிற்பேட்டை, பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து மினி பேரூந்துகளும் ரயில்வே நிலைய சந்திப்பு பகுதியை ஒட்டியுள்ள பூ மார்க்கெட் பகுதியின் வழியாக சென்று வருகிறது.
இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் இதே சாலையில் செல்கிறது. இந்நிலையில், ஒரு சில மினி பேரூந்து ஓட்டுநர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேரூந்துகளை சாலையின் மையப்பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மினி பேரூந்துகளின் இயக்கத்தை கண்காணித்து முறைப்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



