குளித்தலை, ஆக.26: குளித்தலை நகர திமுக அலுவலகத்தில் திமுக வக்கீல் அணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக வக்கீல் அணி சார்பில் திமுக வக்கீல் அணி ஆக்க பணிகள் குறித்தும், இளம் வக்கீல்கள் திமுகவில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் அளிப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மூத்த வக்கீல் பாலன் தலைமை வகித்தார்.
மாவட்ட திமுக வக்கீல் அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வக்கீல் அணி தலைவர் ரமணி, முன்னாள் எம்எல்ஏ வக்கீல் காமராஜ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் காசபிகாஷ், துணை அமைப்பாளர்கள் லட்சுமணன், செல்வகுமார், முன்னாள் அரசு வக்கீல் நீலமேகம் ஆகியோர் திமுக வக்கீல் அணி வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் குளித்தலை, தோகைமலை, தரகம்பட்டி, கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு உட்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். வக்கீல் மகேந்திரன் நன்றி கூறினார்.



