Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரவக்குறிச்சி அருகே 50 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்

கரூர், டிச. 25: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசாரும், மதுவிலக்கு போலீசாரும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள பள்ளப்பட்டி கோவில் தெரு அருகே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்ட போது, அந்த பகுதியில் இருந்து 150 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, அஷ்ரப் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.