Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

குழந்தை இல்லாத ஏக்கத்தில் முதியவர் தற்கொலை

கடவூர், அக், 23: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே சிந்தாமணிபட்டி காவல்சரகம் வாழ்வார்மங்களம் ஊராட்சி குமரகவுண்டனூர் பகுதியில் வசித்து வந்தவர் குழந்தைவேல் (70). குழந்தைவேலுவிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில், இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றதாகவும் தெரிகிறது. மேலும் தனக்கு குழந்தைககளும் இல்லை, தனது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார் என்று, குழந்தைவேல் பல வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி காலை 8.30 மணி அளவில் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் குழந்தைவேலுவை மீட்டு கரூர் அரசுக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சிந்தாமணிபட்டி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.