அரவாக்குறிச்சி, அக். 23: அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூரை அடுத்த வாவிகனம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார். ரூ.4000 மதிப்புள்ள 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரவக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூரை அடுத்த வாவிகனம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நடேசன் (55) என்பவர் அவர் வாவிகனம் பகுதியில் தங்கியுள்ள வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த அரவக்குறிச்சி போலீசார் அவரிடம் இருந்து ரூ.4000 மதிப்புள்ள 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


