கரூர், அக். 23: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மையம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயர் தலைமை வகித்தார்.
அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் க லந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.


