கரூர், செப். 18: பாரத பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பாஜ சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கரூர் வெண்ணெய் மலை முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம், நகரத் தலைவர்கள் சரண்ராஜ், ராமமூர்த்தி ஒன்றிய தலைவர்கள் பாலுச்சாமி,சிந்தியா நடேசன் உள்பட திரளான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


