கரூர், செப். 18: தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு தவெக மேற்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148 வது பிறந்த தினத்தையொட்டி கரூர், திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழக வெற்றி கழக துணை பொதுச்செயலாளர், கரூர் மாவட்ட கழக அமைப்பு செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மதியழகன் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


