கரூர், செப்.18: கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் சீத்தப்பட்டி பிரிவுக்கு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த குகை வழிப்பாதையில் அதிகளவு வாகனங்கள் செல்லாத நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்கள் முகாமிட்டு குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே தூக்கி எரிந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் இந்த பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குகை வழிப்பாதையை அடிக்கடி பார்வையிட்டு இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனவைரும் எதிர்பார்க்கின்றனர்.


