கரூர், அக்.17: திருச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து பேரூந்துகளும் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக கரூர் நகருக்குள் செல்கிறது. இதில், மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இறங்கித்தான் செல்கின்றனர்.
எனவே, லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


