கரூர், அக். 17: இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாட கரூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 25ம்தேதி முதல் 29ம்தேதி வரை சென்னை காரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில், இந்தியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, மாலத்தீவு, மலேசியா, பங்களாதேஷ், உஸ்பெஸ்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த போட்டியில் ஓபன் பிரிவில் கரூரைச் சேர்ந்த மாணவி பிரவிணா என்ற மாணவி கலந்து கொண்டு விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


