அரவக்குறிச்சி, அக். 17: அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே டூ வீலரின் பின்னால் கார் மோதிய விபத்தில் டூ வீலர் ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்தில் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள இழுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரது மகன் இடும்பன் (31). இவர் கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் பஜாஜ் டிஸ்கவர் வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத கார் ஒன்று டூவீலரின் பின்னால் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இடும்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


