கரூர், அக். 16: சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கரூர் பழைய பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதாக கரூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீசார் கருப்புசாமி (56) என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடமிருந்து அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.5,040. கரூர் போலீசார் கருப்புசாமியை கைது செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.


