கரூர், அக். 16: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார்.
அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.


