Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மூடப்பட்ட டாஸ்மார்க் ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்

கரூர், மே 16: அனைத்து தொழிற்சங்களின் டாஸ்மார்க் ஊழியர்களின் கூட்ட அமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களில் செயலாளர் பழ/அப்பாசாமி, சி ஐ டி யு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், எல்எல்எஃப் தொழிற்சங்க மாநில செயலாளர் சுடர் வளவன், டாஸ்மாக் நிர்வாகிகள் விஜயகுமார் கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கரூர் மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் ஒரு மனு வழங்கியுள்ளனர்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்டு 717 டாஸ்மார்க் கடைகள் மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மூடப்படும் கடைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்துக்கும் பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பிற அரசு துறைகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும்.

தனியார் எப்.எல்.2 உரிமம் மனமகிழ் மன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அரசு டாஸ்மார்க் கடைகள் மூடப்படுவதன் முலம் இந்த தனியார் மனமகிழ் மன்ற மதுக்கடைகளில் அதிக குடிமக்கள் குவியவே வழிவகுக்கும். அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது என்பதை கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படும் மனமகிழ் மன்ற கடைகளுக்கு அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளத.