Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கரூர் பகுதியில் லேசான சாரல் மழை

கரூர், அக். 15: கரூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று மாலை லேசான அளவில் சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தென்மேற்கு பருவமழை பொய்த நிலையில், வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்களும், விவசாயிகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை கரூர் மாவட்டம் முழுதும் வெயிலுக்கு பதிலாக இதமான சூழல் நிலவியது.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மழை வருவதற்கான சூழலும் இருந்தது. இதனால், கரூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்யும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பலத்த மழைக்கு பதிலாக சிறிது நேரம் கரூர் மாவடடம் முழுதும் குறிப்பாக கரூர் மாநகராட்சி முழுதும் லேசான அளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.