கரூர், அக். 15: கரூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ஆத்தூர் பிபிசி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கரூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன் (42) என்பவர் மது விற்றது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து செந்தில்நாதனை போலீசார் கைது செய்தனர்.


