Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சுட்டெரிக்கும் வெயில் இளநீர் விற்பனை அமோகம்

கரூர், அக். 14: வெயிலின் தாக்கத்தால் இளநீர் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொதுவாக கரூரில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் கோடை காலமாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அதிகளவு வெயில் சுட்டெரிக்கும் இதன் காரணமாக வெயிலை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள், இளநீர், நொங்கு, தர்ப்பூசணி, ஜூஸ் போன்றவைற்றை வாங்கி வெயிலை சமாளித்து வந்தனர். எல்நினோ காரணமாக அந்த தென்மேற்கு பருவமழை காலத்திலும் மழை பெய்யவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை காலமும் துவங்கியுள்ளது.

ஆனாலும், வடகிழக்கு பருவமழையும் பெய்யவில்லை. மாறாக, மே மாதத்தை போல சுட்டெரிக்கும் வெயில்தான் வாட்டி வதக்கி வருகிறது. கடந்தாண்டு இதே மாதத்தில் ஒரளவு மழை பெய்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் தான் அதிகளவு உள்ளது. எனவே இளநீர் வியாபாரிகள், பொள்ளாட்சி பகுதிகளில் இருந்து மொத்தமாக இளநீர்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். வெப்பத்தை சமாளிக்க உதவும் பானங்களில் இளநீரும் ஒன்று என்பதால் கரூர் மாநகர மக்கள் தற்போது இளநீரை அதிகளவு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.