கடவூர், நவ, 13: கடவூர் அருகே முள்ளிப்பாடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. கரூர் மாவட்டம் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் வடக்கு தெரு மணி மகன் ராசு (52). இவர் அதே பகுதியில் உள்ள பொது டி.வி அறை பின்புறம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளார்.
இதுகுறித்து இப்பகுதியினர் பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்து உள்ளனர். அப்போது ராசு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
