கிருஷ்ணராயபுரம், நவ.13: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் 136 கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் வாக்காளர் பதிவு அலுவலரும் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீடு படிவத்தை நிரப்புவது தொடர்பாக பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் விஜயா, தனி தாசில்தார்கள் வித்யாவதி,மைதிலி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சித்ரா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
